தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயம்புத்தூரில் தென்னை விவசாயத்தை காக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயத்திற்கு இடையூறாக உள்ள பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூரில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூரில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 18, 2021, 10:26 PM IST

கோயம்புத்தூர்: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயத்தைக் காப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

தென்னையைப் பாதிக்கும் கூன்வண்டு தாக்குதல், வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு ஆண்டுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம்காட்டி தென்னையைக் கொண்டு செய்யக்கூடிய தேங்காய் எண்ணெய் தயாரித்தல், மட்டை கம்பெனி, கயிறு தொழிற்சாலை, நீரா பானம் ஆகிய தொழில்களையும் முடக்குவதைத் தவிர்க்க வேண்டும், பொள்ளாச்சியை மையமாகக்கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும், தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

கோயம்புத்தூரில் தென்னை விவசாயத்தை காக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இது குறித்து பேசிய பழனிசாமி, "விவசாயிகள் பிரச்னை குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.

தென்னை விவசாயிகளைப் பொறுத்தவரை அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தென்னை மட்டும் தென்னை சார்ந்த தொழில்களுக்கு மிகப்பெரிய ஆபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, விவசாயிகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செல்போன் வெடித்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details