கோயம்புத்தூர்: கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலராக இருந்தவர் சுப்பிரமணியம். இவர் கோவை நீலம்பூர் பகுதியில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972ஆம் ஆண்டு தொடங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார்.
பின்னர் சிங்காநல்லூர் பகுதியில் 1996ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் தொடங்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்தார்.
சாந்தி கியர்ஸ் நிறுவனம் விற்கப்பட்ட நிலையில் சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.
அதில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சுப்ரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 119 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. அதில் தொழில் துறையில் சிறந்து விளங்கியதாக சுப்பிரமணியத்திற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இது கோவை மக்களை பெருமையடையச் செய்துள்ளது.
இதே போன்று கோவை தேக்கம்பட்டியை சார்ந்த 105 வயது பாட்டி பாப்பம்மாளுக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விவசாய பணி மேற்கொள்ளும் அவருக்கு இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாப்பம்மாள் பாட்டு கூறுகையில், “மத்திய அரசு வழங்க கூடிய இந்த உயரிய விருது தனக்கு அளிக்கப்பட உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்வதற்கு வயது தடையில்லை என்பதை உணர்த்தவே இந்த தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து வருகிறேன். நாட்டின் முதுகெலும்பான இந்த விவசாயத்தில் இன்றைய இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
குடும்பத்தாருடன் பாப்பாத்தி அம்மாள் படித்து விட்டு வெளிநாடு செல்வதை காட்டிலும் குறைந்த அளவிலாவது விவசாயம் செய்தால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியும். அந்தக் காலத்தில் அதிக அளவில் விவசாயத்தில் ஆர்வம் காட்டினார்கள்.
இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள் தற்போது விவசாயத்தில் ஆர்வம் குறைந்துள்ளது இதற்கு காரணம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும், விவசாய பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காததுமே காரணம். ஆகவே, விவசாயத்தை ஊக்குவிக்க அனைத்துவித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முன்னதாக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து பாப்பம்மாள் பாட்டியை பல்வேறு பகுதிகளிலிருந்து நேரில் வந்தவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க : எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது