கோயம்புத்தூர்: கணியூர் பகுதியில் உள்ள கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கரும்பலகையும் கணினியும் ஆசிரியர்களை போற்றுவோம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் உரையாடினார்
அப்போது பேசிய அவர், "காமராஜரை போல் இல்லாமல் அவரை தொட்டு விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் செய்து வருகிறேன். நான் எப்போதும் பிரச்சனைகள் குறித்து அந்த இடத்துக்குச் சென்று நேரில் விசாரிப்பேன். அப்போதுதான் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து கண்டறிய முடியும்.
அதற்கான தீர்வும் காண முடியும், விமர்சனம் ஆக்கப்பூர்வமாக வந்தாலும் எதிர்மறையாக வந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு அதனை சரி செய்வது தான் என்னுடைய பழக்கம். விமர்சனங்கள் வந்தாலும் விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டு, அதனை தீர்ப்பது என்பது குறித்து யோசனை இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையாக இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்ததாக இருந்தாலும் படிப்படியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்" என தெரிவித்தார்.