தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை விமான நிலையத்தில் 6.99 கிலோ தங்கம் பறிமுதல்! - Gold seized at Coimbatore airport

கோவை: சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 6.997 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Gold seized at Coimbatore airport
Gold seized at Coimbatore airport

By

Published : Dec 23, 2019, 11:27 AM IST

கோவை விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், டி.ஆர்.ஐ துணை இயக்குநர் ஸ்ரீ சதீஷ் தலைமையில் அலுவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, சார்ஜாவிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஷாருக்கான் (19), ஹமீமு அக்தர் (21) என்ற இரு பயணிகளிடமும் இருந்த உடைமைகளை ஆராய்ந்தபோது ஒரு சிறிய ஏர் கூலர் இருந்தது.

அதனை அலுவலர்கள் சோதனை செய்தபோது, ஏர்கூலரின் மோட்டாரில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி நிற உலோகத்தைக் கண்டறிந்தனர். பின்னர் அந்த வெள்ளி நிற உலோகத்தை ஆராய்ந்தபோது, அது வெண்ணிற முலாம் பூசப்பட்டது என்பது தெரிய வந்தது.

அந்த பூசப்பட்ட முலாமை அகற்றிய பின் 6.997 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு 2.7 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், அந்த பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதித்துறை காவலில் வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details