தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் ரூ.4.27 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கோவை: வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சுங்கச்சாவடியில் சோதனை மேற்கொண்டு ரூ.4.27 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கோவையில் செம்மரக் கட்டைகள் கடத்தி வந்த நபர் கைது
கோவையில் செம்மரக் கட்டைகள் கடத்தி வந்த நபர் கைது

By

Published : Jan 23, 2020, 7:43 AM IST


கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக கண்டெய்னர் லாரி மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் கணியூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது, அதில் 9.5 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரி மூலம் செம்மரக்கட்டைகளை கடத்திவந்த ராஜ்குமார் என்பவரை வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து செம்மரக்கட்டைகளை வருவாய் நுண்ணறிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் செம்மரக் கட்டைகள் கடத்தி வந்த நபர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.4.27 கோடி ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செம்மரக்கட்டைகளை கடத்திய ராஜ்குமாரை கோவை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் அவரை நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதையும் படிங்க:

பாஜகவை கழட்டிவிடுவோம் ... இல்ல எங்கள பிரிக்க முடியாது - உளறிய அமைச்சர் பாஸ்கரன்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details