கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவற்றை கொண்டு ஒரு கும்பல் மான், முயல் போன்றவற்றை வேட்டையாடுவதாக சிறுமுகை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் நவீன், சத்யராஜ் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்ட நான்கு நபர்களை பிடித்தனர்.
மான் வேட்டைக்கு சென்ற 4 பேர் கைது - Deer hunt
கோயம்புத்தூர்: சிறுமுகை வனச்சரகத்தில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி உபயோகித்து வேட்டையாட சென்ற நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின் அவர்கள் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வனக்காப்பாளர்கள் சித்தன், பாபு, ஆனந்தி, ராஜலட்சுமி, முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்த விசாரணையில், அந்த நான்கு நபர்களின் பெயர் குமார், சுரேஷ், செல்வராஜ், மனோஜ் என்பதும், மானை வேட்டையாட சென்று மான் கிடைக்காமல் வனப்பகுதியிலிருந்து கிளம்பியதும் தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி குற்றவாளிகளிடம் இருந்த கள்ளத்துப்பாக்கியை (உரிமம் பெறாத துப்பாக்கி) காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அனைவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.