தமிழ்நாடு முழுவதும் 'இயேசு அழைக்கிறார்' அறக்கட்டளை, காருண்யா பல்கலைக்கழக நிறுவனர் பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள், பல்கலைக்கழகம், உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் 250க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்பத்தூரிலும் காருண்யா பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஜெப மண்டபம், பல்கலைக்கழகத்திற்குள் உள்ள அவரது வீடு, அலுவலகம், லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்தவ பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது.