கோயம்புத்தூர்:சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆறு இடங்களில் மக்களைச் சந்தித்து மனுக்கள் பெரும் 'மக்கள் சபை நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் செந்தில்பாலாஜி, மக்கள் சபை கூட்டம் கடந்த 30ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 51 இடங்களிலிருந்து 36 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து கொடுத்த மனுக்கள் அனைத்திற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.