தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் நிலையம் முன் கத்தியுடன் சிக்கிய இளைஞர்! - காவல் நிலையம் முன் கத்தியுடன் சிக்கிய இளைஞர்

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகம் எதிரே கீழே விழுந்த இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது பட்டாக்கத்தியுடன் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிய இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாக்கத்தியுடன்  சிக்கிய இளைஞர்
பட்டாக்கத்தியுடன் சிக்கிய இளைஞர்

By

Published : Mar 3, 2022, 8:27 AM IST

Updated : Mar 3, 2022, 1:28 PM IST

சென்னை:காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் நேற்று(மார்ச்.02) மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காவல் ஆணையர் அலுவலகம் எதிரே நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு கண்காணிப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் அந்த இளைஞரை தூக்க சென்றபோது அவரது இடுப்பில் பட்டாக் கத்தி மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை பிடித்த காவல்துறையினர் அவரை காவல் ஆணையர் அலுவலகம் உள்ளே அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் தனது பெயர் கார்த்திக் எனவும், தான் ஒப்பந்தப் பணியாளராக எழும்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

காவல் நிலையம் முன் கத்தியுடன் சிக்கிய இளைஞர்

மேலும், எழும்பூர் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பட்டாக் கத்தியை எடுத்து அதை ஆர்.பி.எஃப் அலுவலர்களிடம் கொடுப்பதற்காக வைத்துள்ளதாக முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரது பதற்றமும், பேச்சும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த இளைஞரின் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில் தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளருக்கான அடையாள அட்டையும், 4 செல்போன்களும் இருப்பதை கண்ட காவல்துறையினர் அந்த இளைஞர் ஏதேனும் உள்நோக்கத்துடன் கத்தியுடன் சுற்றுகிறாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வேப்பேரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வேப்பேரி காவல்துறையினர் கார்த்திக் என்ற அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆணையர் அலுவலகம் எதிரிலேயே பட்டா கத்தியுடன் இளைஞர் காவல்துறையினரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது

Last Updated : Mar 3, 2022, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details