தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பி.இ. மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

By

Published : Jun 19, 2022, 6:36 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தொடங்க உள்ளது. மேலும் மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.

பி.இ. மாணவர் சேர்க்கை

இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூலை 22 ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.

கலந்தாய்வு விபரம்

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

பொதுக் கலந்தாய்வு

பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும். அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17,18 ஆம் தேதிகளில் நடைபெறும்.

மேலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-22351014, 044-22351015 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்!

ABOUT THE AUTHOR

...view details