காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைய துவங்கியுள்ளது.மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ உபகரணங்களும், கொரோனா நிவாரண நிதிகளும் தாராளமாக வழங்க முன்வரலாம் என தொழிற் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.அதன் பேரில் நாள்தோறும் மருத்துவ உபகரணங்களும், நிவாரண நிதிகளும் குவிந்து வருகின்றன.
கரோனா - ரூ. 10 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்களை வழங்கிய மிடாஸ் நிறுவனம் - சிப்காட் இருங்காட்டுக்கோட்டை
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 10 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஸ்ரீபெரும்புதூர் மிடாஸ் சேப்டி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிப்காட் இருங்காட்டுக்கோட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
(SIMA ) உறுப்பினரான Midas safety pvt ltd சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 70 ஆயிரம் முகக்கவசங்களையும், 40 ஆயிரம் N-95 முகக்கவசங்களையும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அந் நிறுவன மனித வள மேம்பாட்டுத்துறை துணை மேலாளார் திவாகர் மற்றும் சப்ளை சைன் உதவி மேலாளர் பிரேம்குமார் ஆகியோர் இன்று வழங்கினர்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள வீல்ஸ் இந்தியா மற்றும் ஆக்சல் இந்தியா ஆகிய இரு நிறுவனம் இணைந்து 8.75 லட்சம் மதிப்புள்ள 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 5 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வீல்ஸ் இந்தியா டூல் ரூம் துணை தலைவர் சுவாமிநாதன் , ஆக்செல் இந்தியா நிர்வாக இயக்குனர் மாதவன் ஆகியோர் வழங்கினர்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் அமைந்துள்ள சிக்மா இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 48 பல்ஸ் ஆக்சிமீட்டர்களை நிறுவன இயக்குனர் பிரம்மரிஷி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இந்நிகச்சியில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் சீமா மேலாளர் கணேஷ் குமார் , நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்.