சென்னை: தமிழ்நாடு அரசின் 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி இன்று(டிச.3) ரூ.2,756 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அதிரடி... - Women Self Help Groups loans
கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள ரூ.2,756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்காக முதல்கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்