சென்னை: சோழிங்கநல்லூரைச் சேர்ந்த உஷா (51) என்பவர் வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உஷா, “சோழிங்கநல்லூரில் சமையல் வேலை செய்து, அதன் மூலம் சேர்த்து வைத்த பணத்தில் 2014ஆம் ஆண்டு 700 சதுரஅடி நிலத்தை வாங்கி, வீடு கட்டி அதில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷுக்கு, கார் ஓட்டுநராக பணிபுரியும் ராஜா என்பவர் 2016ஆம் ஆண்டு முதல் எனது வீட்டை மலிவான விலைக்கு எழுதி கொடுக்குமாறு அடியாள்களை வைத்து மிரட்டி, தகராறில் ஈடுபட்டு வருகிறார்.
மிரட்டல் விடும் சட்டப்பேரவை உறுப்பினர்
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷும் அடியாள்களுடன் எனது வீட்டிற்குள் நுழைந்து ராஜாவிற்கு வீட்டை எழுதி கொடு இல்லையென்றால் தாங்களே பறித்துக் கொள்வதாக மிரட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துகொள் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்றார்.
திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் இது குறித்து செம்மெஞ்சேரி காவல் நிலையத்தில் 12 முறையும், காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு முறையும் புகார் அளித்தும், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த ரமேஷ், செம்மஞ்சேரி காவல் நிலையத்தை கட்டியதே தான் தான் எனவும், காவல் துறையினர் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறினார்.
எம்எல்ஏ மீது புகார்
கடந்த ஞாயிறன்று ஓட்டுநர் ராஜா, தனது அடியாள்களுடன் கடப்பாரையோடு வந்து எனது மகள், மருமகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். மேலும், எனது வீட்டின் சுவரை இடித்துவிட்டு, எனது வீடு நீங்கள் வெளியேறுமாறு கூறினார்.
தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சி தொடர்ந்து எனது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் எனது குடும்பத்தினரை கொலை செய்ய நினைக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், ஓட்டுநர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காதலியுடன் சேர்ந்து கணவர் கொலை மிரட்டல்: மனைவி தீக்குளிக்க முயற்சி