சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவருபவர் நிருபன் சக்ரவர்த்தி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு Naukri.com இணையதளம் மூலமாக மலேசிய நாட்டில் பணிபுரிவதற்காக விண்ணப்பித்தவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அவர்களிடம், 35 நாட்களில் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகவும் மேலும் அதற்கு 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை நம்பி 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.
பின்னர் மூன்று மாதங்களுக்கு பின்பு பணம் கட்டிய இளைஞர்கள் தொடர்பு கொண்டபோது, நிருபன் சக்கரவர்த்தியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த இளைஞர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று பார்த்துள்ளனர்.