சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் 24ஆம் தேதிமுதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது.
இதனால் 2019-20 கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மேலும், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன.
2020-21 கல்வியாண்டில்...
2020-21இல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு (TN Public Exams) நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, 9, 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மட்டும் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். கரோனா இரண்டாவது அலையின் காரணமாக, நடப்புக் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இரு கட்டங்களாகத் திறக்கப்பட்டன.
நேரடி வகுப்புகளுக்குத் தொடர் பாதிப்பு