தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொலை, கொள்ளைக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் கேள்வி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Minister question

By

Published : Jul 24, 2019, 4:22 PM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மக்கள் அதிமுகவுக்கு தான் வாக்கிளிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
மாநிலத்தில் பணத்திற்காக கொலை, கொள்ளை நடக்கின்றன. இதுபோல் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் அறிவுரை வழங்க வேண்டும். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இது அனைத்து ஆட்சிகளிலும் நடக்கிறது. அவரவர் பார்த்து திருந்திக் கொள்ள வேண்டியது தான். இதில் வேறு எதுவும் பண்ண முடியாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details