தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எது திராவிட மாடல்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் - சட்டப்பேரவை

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரின் சிந்தனைகளையும் உள்ளத்தில் வைத்து செயல்படுவதால்தான், திமுக ஆட்சியை "திராவிட மாடல்" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டே இருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

assembly
assembly

By

Published : May 7, 2022, 7:23 PM IST

சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

  • 4,000 ரூபாய் கரோனா உதவித் தொகை பெற்ற குடும்பங்கள், 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900.
  • கரோனா கால நிவாரணமாக 13 மளிகைப் பொருள்களைப் பெற்ற குடும்பங்கள், 2 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 535.
  • 21 விதமான பொங்கல் பொருள்களை பெற்ற குடும்பங்கள், 2 கோடியே 12 இலட்சத்து 17 ஆயிரத்து 756.
  • கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 10 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 713 பேர்.
  • கரோனாவில் இறந்த மருத்துவ முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிதி உதவி 79 கோடியே 90 லட்சம்.
  • ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்த காரணத்தால் பயன் பெறுபவர்கள் 1 கோடி பேர்.
  • புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் 11 லட்சத்து 47 ஆயிரத்து 844 பேர்.
  • புதிதாக மின் இணைப்பினைப் பெற்றவர்கள் 9 லட்சத்து 91 ஆயிரம் பேர்.
  • அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த அரசு ஊழியர்கள் 9 லட்சத்து 32 ஆயிரம் பேர்.
  • அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த ஓய்வூதியதாரர்கள் 7 லட்சத்து 15 ஆயிரம் பேர்.
  • நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 22 லட்சத்து 20 ஆயிரத்து 109 பேர் என திமுக ஆட்சியின் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

பின்னர், 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் இதனுடைய உள்ளடக்கம். 'சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு இருக்கிறானோ, அவனை உயர்த்துவதுதான் எனது நோக்கம்' என்றார். தந்தை பெரியார். 'நான் சாமானியர்களுக்காக உழைக்கும் சாமானியன்' என்றார். பேரறிஞர் அண்ணா. 'நான் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக எந்நாளும் உழைப்பேன்' என்றார்.

முத்தமிழறிஞர் கலைஞர். இந்த மூவரின் சிந்தனைகளையும் உள்ளத்தில் வைத்து செயல்படுவதால்தான், இந்த ஆட்சியை "திராவிட மாடல்" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டே இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கான எண்ணம் கொண்ட அனைவரது உள்ளத்திலும் திராவிட மாடல் உள்ளது. இந்தக் கூட்டு எண்ணம்தான் அரசின் இதயத்துடிப்பாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக - முதல்வன் படப் பாணியில் மக்களை சந்தித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details