சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க கடற்கரைகள், அபாயகரமான குளங்கள், அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், 24 மணி நேரமும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்புக் குழுவைப் பணியமர்த்த வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோட்டீஸ்வரி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இது குறித்து பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.