தமிழ்நாடு பட்ஜெட் இன்று (பிப்.14ஆம்) சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கலாகிறது. இதில் தொழில்துறையினர் விவசாய சங்கத்தினர் பல்வேறு எதிர்பார்ப்புக்களை தெரிவித்துள்ளனர். கோவையைப் பொருத்தவரை குறுந் தொழில்கள் விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில் இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “வர உள்ள தமிழக பட்ஜெட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
வட்டியில்லாத கடன்
ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் ஏமாந்து உள்ள தங்களுக்கு மாநில பட்ஜெட் நல்ல ஒரு தீர்வினை தரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் பேட்டை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ரூ.25 லட்சத்தில் கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ஒரு கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த ஓராண்டாக தொழில் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. இதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மாநில அரசு புதிய கடன் திட்டத்தை அறிவித்து வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்த தொழில்களை பாதுகாக்க மாநில பட்ஜெட் என்பது நல்ல வாய்ப்பு உருவாக்கித் தரும் என காத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து குறுந்தொழில் முனைவோருக்கு ஜாப் ஆர்டர் நேரடியாக பெறுவதற்கு வழிகாட்டுதல் வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி சிக்கலில் சிக்கி உள்ள குறுந்தொழில்களை மீட்கும் வகையில் அறிவிப்புகள் வரவேண்டும். மின் கட்டணம் என்பது அதிகமாக உள்ள நிலையில் அதனை குறைத்து வழங்கவேண்டும்” என்றார்.
பம்ப்செட் தொழிலாளர்கள் கோரிக்கை
பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில், “சிறு -குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக பம்ப்செட் பரிசோதனை மையம் கேட்டு வருகிறோம்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பரிசோதனை நிலையம் நிறுவப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பரிசோதனை மையம் மூடப்பட்டுள்ளது. அதை புனரமைத்து தரவேண்டும். கோவை பொருத்தவரை சிறு பொருள் பம்ப்செட் தொழில்கள் அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு கோவையிலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மோட்டார் பம்ப்செட் விற்பனைக்கு செல்கிறது. இதற்காக ஐஎஸ்ஐ தர சான்றிதழ் பெறப்பட்டு வந்த நிலையில் பரிசோதனை மையம் 20 வருடங்களாக மூடப்பட்டு உள்ளது.
குறைந்த விலையில் மின்சாரம்
இதனால் ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற தாமதமாகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பரிசோதனை மையம் அமைய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். கோவையில் ஏறக்குறைய 80 ஆயிரம் தொழில் கூடங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே குறுந்தொழில்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கிட வேண்டும். கோவை நகரில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்த பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வேண்டும்” என்கிறார் மணிராஜ்.
நதிநீர் இணைப்பு
தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கலின்போது விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. தேசிய நதி நீர் இணைப்பு குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்நிலையில் , தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழக நதிகளை இணைக்கும் அறிவிப்பை எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாடு பட்ஜெட்டில், கோவை விவசாயிகள் எதிர்பார்ப்பு மேலும் காவிரி படுகையை, பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், “இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதனை சட்ட வடிவமாக கொண்டு வரவேண்டும். கோவையை பொறுத்தவரை நொய்யல் நதி சீரமைப்பு, கவுசிகா நதி சீரமைப்பு, பாண்டியாறு, புன்னம்புழா நதிகள் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க:'1.30 மணி நேரத்தில் 50 முட்டைகளில் 50 தலைவர்களின் உருவம்' - வரைந்து அசத்திய கோவை மாணவி