மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிங்கி (30) என்ற பெண், சென்னை அண்ணா நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிங்கியின் நண்பர் கிருஷ்ணன் பகதூர் உட்பட மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேற்கு வங்கப் பெண் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - anna nagar
சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் அண்ணாநகரில் கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, கொலைசெய்யப்பட்ட பிங்கியின் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் வந்துசெல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கொலை தொடர்பான அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.