திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வழிபட்ட பின் தனது பிரச்சாரத்தை தொடங்கிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் குப்பன், மாதவரம் தொகுதியில் போட்டியிடும் மூர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “ஆணும் பெண்ணும் சமம் என பெரியாரின் கனவினை, பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுக அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சியில் ஏதாவது உருப்படியான திட்டம் கொண்டு வந்துள்ளார்களா.
வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்! - ஓபிஎஸ் உறுதி! - தேர்தல் அறிக்கை
சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாஷின் மெஷின் உள்பட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ops
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வாஷின் மெஷின் உள்பட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில் வாய்ப்பு மறுப்பு! தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ சுயேட்சையாக போட்டி!