தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடி கார் சொகுசு கார் இல்லையா?

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தங்களிடம் ஆடி கார் மட்டுமே உள்ளது சொகுசு கார் இல்லை என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

pubg madan wife krithika
pubg madan wife krithika

By

Published : Jul 8, 2021, 8:04 PM IST

சென்னை: யூடியூப்-ல் பப்ஜி விளையாடியபோது சிறுவர்கள், பெண்களை இழிவாகப் பேசியதோடு, பணம் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் மதன் மீது ஜூலை 6ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், மதனின் மனைவி கிருத்திகாவிற்கு ஜாமீன் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்த கிருத்திகா, "கடந்த 10 ஆண்டுகளாக எந்த சொகுசு பங்களாக்களையும் நாங்கள் வாங்கவில்லை. எங்களிடம் ஆடி ஏ 6 கார் மட்டுமே உள்ளது. சொகுசு கார் இல்லை.

நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தோம்" என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில், ஆடி ஏ 6 கார் சொகுசு கார் இல்லையா? என கிண்டல் செய்து ட்வீட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆடி கார் நிறுவனத்தை டேக் செய்ததுடன் ஆடி கார் சொகுசு கார் இல்லையா என கேள்வி எழுப்பிவருகின்றனர். கடந்த சில நாள்களாக ஆடி கார் பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. இருப்பினும் பப்ஜி மதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆடி ஏ 6 காரின் விலை ரூ. 54.20 லட்சமாகும்.

இதையும் படிங்க:சொந்த வீடில்லை... உழைத்தப் பணத்தை மட்டுமே பயன்படுத்தினோம் - கிருத்திகா உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details