சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவாக, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை மூடப்பட்டிருந்தது. தண்ணீர் பஞ்சத்தால், கழிவறை மூடப்பட்டதாக, நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் உள்ள பிற மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கழிவறை மூடும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திறக்கப்பட்ட பரங்கிமலை மெட்ரோ நிலைய கழிவறை - Chennai
சென்னை: தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டிருந்த பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் கழிவறை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட பரங்கிமலை மெட்ரோ கழிவறை
இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருந்த கழிவறை, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.