சென்னை:மாநகராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜியோ பைபர் கேபிள் நிறுவனத்துடன் போட பட்ட ஒப்பந்தத்தில் முறைகேட்டுடன் காலாவதியான பிறகும் தொடர்வதாக, வார்டு உறுப்பினர் ஜீவன் மாமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்ற செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய, 35 வார்டு உறுப்பினர் ஜீவன், ஆவேசத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவையில் வைத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜியோ பைபர் கேபிள் நிறுவனத்துடன் போட பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகியும் அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருக்கிறது. இதைப் பற்றி மாமன்றத்தில் பேசப்போவதாக விவரங்கள் சேகரித்தபோது, மூத்த மாமன்ற உறுப்பினர் இதைப் பற்றி மாமன்றத்தில் பேசினால் உங்களுக்குத்தான் தேவையில்லாமல் அழுத்தங்கள் மேல் இடத்திலிருந்து வரும் என தெரிவித்தார்.
அது மட்டும் இல்லாமல் சிறையில் இருந்து கூட உங்கள் அலைபேசிக்கு மிரட்டல் வரும் என தெரிவித்தார். இதையெல்லாம் மாநகராட்சி விஜிலென்ஸ் கண்டு கொள்வதில்லை மாநகராட்சி விஜிலென்ஸ் துறை தூங்கி கொண்டிருக்கிறதா? 6ஆம் தேதி சென்னை மாநகராட்சி மின்சார துறைக்கு கடிதம் கொடுத்தேன் இதுவரை எந்த பதிலும் இல்லை.