5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவு - voter turnout
சென்னை: தமிழ்நாட்டில் 5 மணி நேர நிலவரப்படி 63.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.
voter-turnout-percentage-5-pm-in-tamil-nadu
By
Published : Apr 6, 2021, 6:05 PM IST
|
Updated : Apr 6, 2021, 6:49 PM IST
சட்டப்பேரவைத் தேர்தல் 2021 காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் காலை 9 மணி நேர நிலவரப்படி 13.8 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதில், சென்னையில் 10.58 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார். அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
சத்யபிரத சாகு
அதைத்தொடர்ந்து காலை 11 மணி நேர நிலவரப்படி 26.29 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 விழுக்காடும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 20.98 விழுக்காடும் பதிவாகின.
மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக விருதுநகரில் 41.79 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 32.29 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னையில் 37.16 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
3 மணி நேர நிலவரப்படி, 53.55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, நாமக்கல்லில் 59.73 விழுக்காடும், குறைந்தபட்சமாக 41.58 விழுக்காடு வாக்குகளும் பதிவான.
இதையடுத்து 5 மணி நேர நிலவரப்படி 63.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார். இதில், அதிகபட்சமாக நாமக்கல் 70.79 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 50.65 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னையில் 55.31 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.