நடிகராக இருந்து சமூக தொண்டாற்றி, மரக்கன்றுகள் நடப்படுவதன் அவசியத்தைப் புரியவைத்து தானும் செயல்பட்டு, பிறரையும் செயல்பட வைத்த சூழலியல் செயற்பாட்டாளர் நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.
பகுத்தறிவுச் சிந்தனைகளை திரைப்படங்கள் வாயிலாக மக்களின் மனங்களில் விதைத்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவருக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், மக்களும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். சிலர் மரக்கன்றுகளை நட்டு அவருக்குப் பசுமை அஞ்சலி செலுத்தினர்.