சென்னை:விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம்,
”விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்பட்ட 2,554 சிலைகள் நாளை ஊர்வலமாகச்சென்று கடற்கரைகளில் கரைக்கப்பட உள்ளது. குறிப்பாக காசிமேடு, நீலாங்கரை, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் ஆகிய நான்கு கடற்கரைகளில் சிலைகளை கரைக்க காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.
சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக செல்லும்போது மதவாத வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடக்கூடாது என காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலப்பாதைகள் மற்றும் நிறுவப்பட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ளது.
காவல் துறை அனுமதி வழங்கிய நாட்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கொண்டு சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும். சென்னை பெரு நகரில் நிறுவப்பட்டுள்ள சிலைகளை அனுமதிக்கப்பட்டுள்ள 4 கடற்கரைகளில் சிலைகளைக்கரைக்க 17 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக வாகனங்களில் எடுத்துச்செல்வதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மாற்று பாதையைப் பயன்படுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முக்கிய சாலைகளான சென்னை பெருநகரில் ஈவிஆர் சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் ரோடு, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதிட்ரல் ரோடு, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் ஹைரோடு.
டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திருவொற்றியூர் ரோடு, எம்.எஸ் கோயில் ரோடு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் ரோடு, பழைய ஜெயில் ரோடு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடி மரச்சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு,