தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராம சபை மீட்பு வாரத்தின் இரண்டாவது நாள்: அறப்போர் இயக்கம் வேண்டுகோள் - அறப்போர் இயக்கம்

சென்னை: கிராம சபையை உடனடியாக நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் என கிராம சபை மீட்பு வாரத்தை நடத்தும் இயக்கங்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

கிராம சபை
கிராம சபை

By

Published : Oct 12, 2020, 10:00 AM IST

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் கரோனா வைரஸால் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மேலும், ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தி சட்டப் பஞ்சாயத்து இயக்கம், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து கிராம சபை மீட்பு வாரத்தை நேற்று முதல் தொடங்கின.

இந்நிலையில், கிராம சபை மீட்பு வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, கிராமசபையை உடனடியாக நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை கடிதம் அனு ப்ப வேண்டும். வாய்ப்பிருப்போர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று குறைதீர்ப்புக் கூட்டத்தில் கோரிக்கைக் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்து கிராம சபை மீட்பு வார களப்பணிகள் பற்றி விளக்க வேண்டுமென கிராம சபை மீட்பு வாரத்தை நடத்தும் இயக்கங்கள் சார்பாக கேட்டுக்கொளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இது குறித்தத் தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிடும் போது #ConductGramsabhaNow, #இப்போதேகிராமசபை, #கிராமசபை_மீட்பு_வாரம் என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details