புதுச்சேரியில் இன்று புதுச்சேரி, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, ‘இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் கடை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதே போல் புதுச்சேரியில் வணிகர்கள் 24 மணி நேரமும் கடை திறப்பதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
தண்ணீர் தட்டுப்பாட்டால் வணிகர்கள் பாதிப்பு: இழப்பீடு வழங்க வணிகர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வணிகர்கள் பாதிக்கப்படைந்ததற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் வியாபாரிகள் கடைகளை மூட வேண்டிய சூழலில் உள்ளனர். ஓட்டல் உரிமையாளர்கள் ஒரு லாரி தண்ணீரை ரூ.5000க்கு பணம் வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை மனதில் வைத்துக் கொண்டு 6 மாதத்திற்கு அரசு குடிநீர் கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், முதலமைச்சர் நாராயணசாமி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் என்ன என்பதை அறிவித்த பின்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்றார்.