சென்னை விஜயா வங்கி ஏடிஎம் (தற்போது பாங்க் ஆஃப் பரோடா) மையங்களில் பணம் செலுத்த சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் நான்கு ஊழியர்கள் காரில் ரூ. 87 லட்சம் பணத்துடன் சென்றுள்ளனர். அப்போது முதலில் தேனாம்பேட்டையில் உள்ள விஜயா ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பி விட்டு வேளச்சேரி வந்துள்ளனர்.
பின்னர் வேளச்சேரி விஜயநகர் ஒன்றாவது பிரதான சாலையிலுள்ள விஜயா வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப மூன்று ஊழியர்கள் ஏடிஎம் உள்ளே சென்றனர். அப்போது திடீரென கார் ஓட்டுநர் சுமார் ரூ.52 லட்சம் பணத்துடன் காரை எடுத்துச் சென்றுள்ளார்.