தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போட்டு மூன்றே நாள்களில் குச்சியை வைத்து கிளறும் அளவுக்கு சாலை - இது தர்மபுரி சம்பவம்! - கன்னிப்பட்டி கிராமத்திற்கு தார் சாலை அமைக்க கோரிக்கை

தர்மபுரி அருகே கன்னிப்பட்டி கிராமத்தில் புதிய சாலை அமைக்க அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுக்கும் வீடியோ தற்போது தர்மபுரியில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தருமபுரி அருகே சாலை அமைத்து மூன்றே நாளில் பழுதடைந்த சாலை பொதுமக்கள் குற்றச்சாட்டு வைரலாக பரவும் வீடியோ.
தருமபுரி அருகே சாலை அமைத்து மூன்றே நாளில் பழுதடைந்த சாலை பொதுமக்கள் குற்றச்சாட்டு வைரலாக பரவும் வீடியோ.

By

Published : Apr 15, 2022, 8:58 PM IST

Updated : Apr 15, 2022, 9:06 PM IST

தர்மபுரி:காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இண்டமங்கலம் ஊராட்சி கன்னிப்பட்டி பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து இண்டமங்கலம் ஊராட்சி 7ஆவது வார்டு கவுன்சிலர் அருளிடம், அப்பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட்டு சாலையை கையில் தொட்டாலே ஜல்லி மேலே எழுவதாகவும்; சாலைப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் சாலை அமைத்து மூன்று நாட்களிலேயே பழுது ஏற்பட்டதாகவும்கூறி, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தரமற்ற சாலை குறித்து பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மூன்றே நாளில் பழுதடைந்த சாலை பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதையும் படிங்க:'டாணாக்காரன்' படத்தைப்போல சென்னை வெயிலில் ஒரு சம்பவம் - காவலர்களுக்கு நடப்பது என்ன?

Last Updated : Apr 15, 2022, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details