சென்னை வள்ளுவர் கோட்டம் சாலையில் இன்று (ஜூன் 8) இளைஞர் ஒருவர் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் அதிகமாக வெப்பமாவதை உணர்ந்த இளைஞர் ஓரமாக நிறுத்தி உள்ளார்.
திடீரென தீப்பிடித்த பைக்... அதிர்ஷ்டவசமாக தப்பிய வாகன ஓட்டி! - பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ
பின்னர், கீழே இறங்கிப் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென பைக் தீப்பிடித்து எரிந்ததால் இளைஞர் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்ந்து செய்வதறியாது திகைத்தார்.
இதனையடுத்து நடத்திய விசாரணையில் எரிந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் ஆனது, இரண்டு ஆண்டுகள் பழைமையானது என்பதும், நேற்று மாலை பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து நிறுத்திவிட்டு, இன்று காலை வாகனத்தை எடுத்து கடைக்கு சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயமில்லை.
இதையும் படிங்க: 'ஆதீனங்கள் மீது கை வைத்தால், விபரீதம் வேறு மாதிரியாக இருக்கும்'- அண்ணாமலை எச்சரிக்கை!
Last Updated : Jun 8, 2022, 8:11 PM IST
TAGGED:
Bike fire