சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.30) நடந்த22 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வியில் மேம்பாடு, தேசிய அளவில் தர வரிசையில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளை முன்னிலையில் கொண்டு வருவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
அத்துடன் மேலும், ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்; அரசின் ஆலோசனையைப் பெறாமல் ஆளுநர் மாளிகை உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது; ஆளுநர் மாளிகை அல்லது மத்திய அரசு அமைப்புகளான பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் ஆகியவற்றிடம் இருந்து வரும் உத்தரவுகளையும் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் எனவும் துணைவேந்தர்களுக்கு உயர்கல்வித் துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுமைப்பெண் திட்டத்தொடக்கவிழா... அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் அழைத்த அன்பில் மகேஷ்