தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2019-20 ம் கல்வியாண்டில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றிக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு மே மாதம் 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அப்போது கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு கலையியல் பிரிவின்படி சேர 14,526 பேரும், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டபடிப்பில் தொழிற்கல்வி பிரிவிற்கு 169 பேரும், பி.டெக் பட்டப்பட்டிப்பில் சேர்வதற்கு 2,427 பேரும் தகுதியின் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.