தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடாகவிற்கு மறைமுக ஆதரவு - விசிக குற்றச்சாட்டு - cauvery water management authority

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் மறைமுகமாக கர்நாடக அரசுக்கு துணை போவதை வன்மையாக கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

vck

By

Published : Jun 25, 2019, 6:57 PM IST

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய தண்ணீரையே இதுவரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. எனவே ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுவார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர், 'காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இல்லை, மழை பெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்' என்று குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று உள்ளது.

உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், மேலாண்மை ஆணையம் அவர்களுக்குப் பரிந்து பேசுவதோடு, தமிழ்நாட்டிற்கு எதிரான கர்நாடக அரசின் நிலையை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

'இனிவரும் காலங்களில் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைமையிடமான பெங்களூரிலேயே கூட்டலாம்' என்று தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்திருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானதாக உள்ளது. எனவே, அந்த கூட்டத்தை கர்நாடாக மாநிலத்தை தவிர வேறு இடத்தில் நடத்துவதே முறையாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details