தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிற்சாலைகளைத் திறந்து தொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள் - எச்.வசந்தகுமார்

சென்னை: மத்திய, மாநில அரசுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

mp
mp

By

Published : Jun 6, 2020, 5:57 PM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவருமான எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள காணொலியில், “கரோனாவின் தாக்கத்தால் பொருளாதாரம் சரிந்து நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை, வருமானமின்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வேலைவாய்ப்பு இல்லையெனில் ஒரு நாட்டின் பொருளாதாரம் உயராது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எத்தனை தொழிற்சாலைகள் மூடியுள்ளன? எப்போது மூடப்பட்டன? என்ற கணக்கை உடனடியாக எடுத்து, அவை இயங்குவதற்கு உதவ வேண்டும்.

தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் உடனடியாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொருளாதாரம் இல்லையென்பதால் தொழிற்சாலைகள் இல்லை, தொழிற்சாலைகள் இல்லையென்பதால், வேலை இல்லை என்ற நிலையை மத்திய, மாநில அரசுகள் மாற்றி, தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளைத் திறந்து தொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள் - எச்.வசந்தகுமார்

இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

ABOUT THE AUTHOR

...view details