தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டில் இருந்தப்படியே வண்டலூர் பூங்கா புலிகளை காணலாம்! - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

சென்னை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கருப்பு, வெள்ளைப் புலிகுட்டிகளை, இணையத்திளத்தில் 24 மணி நேரமும் தொடர் நேரலையில் மக்கள் காண பூங்கா நிர்வாகம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

வண்டலூர் பூங்கா

By

Published : Jul 12, 2019, 8:36 PM IST

சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும். இங்கு அதிகளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள புலிகள் கூட இந்த பூங்காவில் பாதுகாக்கப்படுகிறது.

கரும்புலிகள் என்பது புலிகள் அடர் கருமை வரிகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்து அதன் பழுப்புநிற மஞ்சள் அடித்தளம் நமக்கு சிறியதாக மட்டுமே தெரியும். அக்கரும்புலிக் குட்டிகளை அதன் தாயுடன் பொதுமக்கள் காண பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைப் பெரும்பாலான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். உலகளவில் கரும்புலிகள் என்பது தனித்துவமாக கருதப்படுகிறது.

www.aazp.in மூலம் புலிகளை காணலாம்

இந்த கரும்புலிகளை பொதுமக்கள் காணுவதற்காக நேரலையில் (live stream) வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய் புலியுடன் கரும்புலிக்குட்டிகள், வெள்ளைப் புலிக்குட்டிகளை 24 மணி நேரமும் தொடர் நேரலையில் பார்க்க, www.aazp.in என்ற இணையதளத்தில் இலவசமாக மக்கள் வீட்டில் இருந்தப்படியே கண்டுகளிக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details