தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பதவி வெறி எடப்பாடிக்கு கண்ணை மறைத்து விட்டது' - வைத்திலிங்கம் - சென்னை மாவட்ட செய்திகள்

பதவி வெறி எடப்பாடிக்கு கண்ணை மறைத்து விட்டது, இன்று பொதுக்கூட்டத்தில் நடத்திய நாடகம் சர்வாதிகாரம் போன்றது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வைத்திலிங்கம் பேட்டி
வைத்திலிங்கம் பேட்டி

By

Published : Jun 23, 2022, 4:32 PM IST

சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "நீதிமன்ற உத்தரவை மீறி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுத்தது செல்லாது, இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

பதவி வெறி எடப்பாடிக்கு கண்ணை மறைத்து விட்டது, இன்று அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரம் போன்றது. பொதுக்கூட்டம் மேடைக்கு கீழே இருந்த 2,500-க்கும் மேற்பட்டோர் கூலிக்கு மாரு அடிக்கும் கும்பல். கட்டுப்பாடில்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு தற்போது நடந்துள்ளது.

வைத்திலிங்கம் பேட்டி

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த என்றைக்கும் தயார். இது பொதுக்குழு அல்ல, அரை மணி நேரத்தில் நடத்தப்பட்ட ஓரங்க நாடகம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ஓபிஎஸ் திமுக அரசை பாராட்டுவதை தொண்டர்கள் விரும்பவில்லை' - கோகுல இந்திரா

ABOUT THE AUTHOR

...view details