மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். புதிய வாக்காளர்களும் தங்களது வாக்குகளை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.
ஒற்றை விரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து - தேர்தல் வாக்குப்பதிவு
சென்னை: நாடு சுத்தமாக ஒற்றை விரல் அழுக்கானால் தவறில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
vairamuthu
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது வாக்கை செலுத்தினார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.