தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ் தேசிய இனத்தை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது - சீமான் - கவிஞர் வைரமுத்துவுக்கு விருது கூடாது

கவிஞர் வைரமுத்துவுக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. விருதுக்கும், புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதபோது அவற்றை நம்பி ஓஎன்வி. விருதுக்குழு கவிப்பேரரசுக்கு வழங்கப்படுவதாகக் அறிவித்த விருதை மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்திருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்.

'விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கே பெருமை' - சீமான்
'விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கே பெருமை' - சீமான்

By

Published : May 29, 2021, 12:40 PM IST

Updated : May 29, 2021, 1:44 PM IST

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக, அவருக்கு ஓஎன்வி., விருது வழங்கக் கூடாது எனப் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விருது அறிவிப்பு குறித்து மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

ஓஎன்வி விருது

ஓட்டப்பலக்கல் நீலகண்டன் வேலு குரூப் என்னும் கேரளக் கவிஞரின் நினைவாக இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஓஎன்வி பண்பாட்டுக் குழு, ஆண்டு தோறும் ஓஎன்வி விருதினை வழங்கி வருகிறது. மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வியின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதுக்குத் தகுதியானவர்களை, கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்கிறது.

கவிஞர் வைரமுத்துவுக்கு விருது கூடாது

கவிஞர் வைரமுத்துவுக்கு விருது கூடாது

இந்த ஆண்டுக்கான விருது தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது, இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட 18 பெண்கள் மீ டூ புகார் அளித்துள்ளனர். வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கக் கூடாது என நடிகை பார்வதி உள்ளிட்டப் பலரும் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது கொடுப்பது, குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என ஓஎன்வி பண்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையே இழிவுபடுத்துவது

ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையே இழிவுபடுத்துவது

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், "கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின், ஆறாவது பாடலுக்காக கேரளாவின் இலக்கிய அமைப்பான ஓஎன்வி,அவருக்கு விருது வழங்குவதாக அறிவித்து, தற்போது அதுகுறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. மலையாளி அல்லாத ஒருவருக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறையென அறிவித்துவிட்டு, பெருந்தமிழரான வைரமுத்துவைத் தற்போது திட்டமிட்டுத் தவிர்க்க முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது.

'ஓ.என்.வி விருதினைக் கலைஞருக்கு சமர்ப்பித்தேன்' - வைரமுத்து

தமிழின் ஒப்பற்றப் பெருங்கவியான கவிப்பேரரசு வைரமுத்துவை அவமதிக்கிற இச்செயல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே இழிவுபடுத்துவதாகும்.

அவமதிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது

அவமதிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது

காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால், சாகாவரம் பெற்ற செழுமையான தன் இலக்கியப் படைப்புகளால் பெருமைமிக்கத் தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்பவர் வைரமுத்து. தமிழ்மொழியின் வளமை செறிந்த தனது ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு அப்பால், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர், தண்ணீர் தேசம், சிகரங்களை நோக்கி, தமிழாற்றுப்படை எனப் பல இலக்கியப் பங்களிப்புகளைத் தமிழ் அறிவுலகிற்கு வழங்கிப் பெருமை சேர்க்கும் பெருந்தமிழர் அவர்களுக்கு நேரும் அவமதிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அவமதிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
புகழ் உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவதூறுகள்
புகழ் உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவதூறுகள்

நீதிமன்றம் மூலம் எவர் மீதானக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க, நிரூபிக்க எத்தனையோ வழிவகைகள், வாய்ப்புகள் சட்டத்தில் இருக்கிற போதும், அவற்றை நாடி அதனைச் செய்யாது கடந்து, அமைதியாக இருந்துவிட்டு வைரமுத்து தனது படைப்புக்காக அங்கீகாரத்தைப் பெறும் போதெல்லாம் திட்டமிட்டு அவதூறு கிளப்பி அவரை அவமதிக்கும் வஞ்சகச் செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. வைரமுத்து ஒவ்வொரு முறையும் புகழ் உச்சிக்குச் செல்லும் போதெல்லாம் அவதூறுகள் மூலம் அவரைக் குணப்படுகொலை செய்ய முயல்வதையும், தாழ்த்த முற்படுவதையும் இனியும் அனுமதிக்க முடியாது.

தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்

தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்

குற்றமென ஒன்றைக் கருதினால் அதனை நிரூபிக்கவோ, தனது தரப்பு நியாயத்தை உலகத்துக்கு எடுத்துரைத்து நிறுவவோ முற்படுவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனைச் செய்யாது, ஊடகங்களில் வெறுமனே செய்தியாக்கி, அவரை இழிப்படுத்தி களங்கம் கற்பிப்பதும், அதன்மூலம் வைரமுத்து அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்துவதும் செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. விருதுக்கும், எதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத போதும் இவற்றை நம்பி ஓஎன்வி. விருதுக்குழு கவிப்பேரரசு அவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்.

தமிழ்நாடு அரசு வைரமுத்துக்கு எதிராக நடக்கும் சதிச்செயலை முறியடிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு வைரமுத்துக்கு எதிராக நடக்கும் சதிச்செயலை முறியடிக்க வேண்டும்
தேசிய விருதுகள் உள்ளிட்ட பலநூறு விருதுகளைப் பெற்று, தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டால், அவ்விருதுகளுக்குதான் பெருமையே ஒழிய, நிறைகுடமாய்த் ததும்பும் அவருக்கல்ல. திட்டமிட்ட வன்மத்தோடு வைரமுத்துவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இனத்தையே அவமானப்படுத்துகிற இதுபோன்ற இழிசெயல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியவை மட்டுமல்லாது வன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவை. ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வைரமுத்துவுக்கு எதிராக நடக்கும் சதிச்செயலை முறியடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Last Updated : May 29, 2021, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details