டெல்லி செல்லும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்துத்துவாவின் பிரதிநிதிகளைப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் பல துறைகளில் தலைவர்களாகவும் நியமித்து வரலாற்றை மாற்றியமைத்து மிகப் பெரிய மோசடியை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.
சமஸ்கிருதம் செத்த மொழி- வைகோ - airport
சென்னை: சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வட மாநில பல்கலைக்கழகங்களில் செய்த ஆக்கிரமிப்புகளைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வர நினைத்துதான் பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் கிறிஸ்து பிறப்புக்கு முன் தமிழ் 300 ஆண்டுகள் பழமையானது, என்றும் சமஸ்கிருதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் ஒரு பொய்யைத் திணித்துள்ளனர்.
இது போன்ற செய்தி வந்தாலும் அதைத் திருத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதை நான் பாராட்டுகிறேன். சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்பதை ஆயிரம் முறை சொல்வேன்” என்றார்.