தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'முதலமைச்சர் மீது கிரிமினல் வழக்கு போடணும்' - வைகோ

சென்னை: நீட் தேர்வால் ஆறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko

By

Published : Jul 17, 2019, 2:42 PM IST

அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செல்ஃபோன் உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுபாடு இருந்துவரும் நிலையில், பல்கலைக்கழக கிராண்ட்ஸ் கமிஷன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் குரு பூர்ணிமாவை பார்ப்பதற்கு மாணவர்கள், ஆசிரியர்களுடன் செல்ஃபி எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனவே இதைக் கூறிய ரமேஷ் போக்ரியால் பதவி விலக வேண்டும்.

முதலமைச்சர் பழனிசாமி மீது கிரிமினல் வழக்கு போடணும் - வைகோ

தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நீட் மசோதா இரண்டு வருடங்களுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு நீட் தேர்வு வராது என்று இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றியுள்ளது. ஆனால் அதன்பின் நடத்தப்பட்ட நீட் தேர்வால், ஆறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த ஆறு பேரின் இறப்பிற்கு காரணமான அரசு நீடிப்பதற்கு உரிமை கிடையாது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். இதுவே மதிமுகவின் கோரிக்கை’ என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details