இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக, அறிவிக்கப்படுமென முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். மேலும், நிலுவையில் உள்ள 11ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்திருப்பது, எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. இது மக்கள் சக்திக்கு கிடைத்த மாபெரும் வெற்றி " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 11ஆம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இரு வகுப்புகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.