தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி - chennai

புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.

சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி
சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி

By

Published : Jul 17, 2021, 6:09 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசி பார்சல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் விமான நிலைய அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி
சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி
பின்னர் குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலத்திற்கு தடுப்பூசி பார்சல்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த தடுப்பூசிகள் தமிழ்நாடு முழுவதும் பிரித்து அனுப்பப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதையும் படிங்க :வருகிறதா 3ஆம் அலை- 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details