சென்னை:மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று (ஜூன் 5) நடைபெறுகிறது. நாடு முழுவதும் 77 நகரங்களில் காலை, மதியம் என இரு வேளைகளாக நடத்தப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் 68 மையங்களில் சுமார் 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 9 .30 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.30 மணிக்கு முடிந்தது. பிற்பகல் 2.30 மணி தொடங்கும் தேர்வு 4.30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் ஹால் டிக்கெட்டில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த முதல்நிலை தேர்வில் சென்னை மாவட்டத்தில் 68 மையங்களில் 25,962 பேர் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்திருந்தநிலையில் 14,063 தேர்வர்கள் பங்கேற்றனர். 11,899 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.
இந்திய குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு இதையும் படிங்க: Exclusive: ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஸ்வாதிஸ்ரீ பிரத்யேகப்பேட்டி!