தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி ராஜிவ் ரஞ்சனிடம் உ.பி. எம்பி மனு!

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்பி இன்று (மார்ச் 20) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி தலைமைச் செயலாளருடன் சந்திப்பு உ.பி பாரதிய ஜனதா எம்பி
சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி தலைமைச் செயலாளருடன் சந்திப்பு உ.பி பாரதிய ஜனதா எம்பி

By

Published : Mar 20, 2021, 8:09 PM IST

உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சி எம்பியும், மத்திய மீன்வள அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினருமான, பிரவீன்குமார் நிஷாத், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சனை இன்று (மார்ச் 20) சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சுருக்குமடி வலையைப் பயன்படுத்த தடை

தமிழ்நாடு மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மத்திய அரசு எந்தவிதமான தடையும் விதிக்காதபோது, தமிழ்நாட்டில் தடைவிதிக்கப்பட்டிருப்பது சரியல்ல என்றும், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

உ.பி பாரதிய ஜனதா எம்பி

தமிழ்நாட்டில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த, தமிழ்நாடு அரசு தடைவிதித்திருப்பதால், விழுப்புரம், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி எம்.பி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'சுருக்குமடி வலை தடை வழக்கு; புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவு'

ABOUT THE AUTHOR

...view details