புதிய மின்திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - prime minister modi
15:49 June 30
நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் கோடியில் புதிய மின்திட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெலலி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (ஜுன் 30) நடைபெற்றது. கூட்டத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின் திட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் புதிய மின் பாதை அமைத்தல், துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும். விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறை கொண்டு வரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.