ஒரு ஊராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அந்த ஊராட்சி தலைவரே பொறுப்பு. அரசுக்கும், ஊராட்சிக்குமிடையே அலுவல் ரீதியாக எந்தத் தொடர்பு நடைபெற்றாலும்; அது ஊராட்சித் தலைவர் மூலம் மட்டும் தான் நடக்க வேண்டும்.
கிராம சபை கூட்டங்களைக் கூட்டுவது, அதற்கு தலைமை ஏற்று நடத்துவது அவரது முக்கியப் பணிகள். ஊராட்சி நிர்வாகத்தில் தலைவருக்கே அதிகப்படியான அதிகாரங்களும், பொறுப்புகளும் உள்ளன. கிராம சபை மற்றும் ஊராட்சி மன்றத் தீர்மானங்கள் முலம் ஊராட்சித் தலைவர் எடுக்கும் முடிவுகளை ஊராட்சிச் செயலர் செயல்படுத்த வேண்டும்.
இருப்பினும், அவரால் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்திட முடியாது. கிராம சபையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் அவர். ஊராட்சித் தலைவருக்கு மாத ஊதியம் என்று எதுவும் கிடையாது.