தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை ஓராண்டு கொண்டாட யூசிஜி உத்தரவு! - netaji subhash chandra bose news

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை ஓராண்டு காலம் கொண்டாட வேண்டுமென பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் ஒராண்டு கொண்டாட யூசிஜி உத்தரவு!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் ஒராண்டு கொண்டாட யூசிஜி உத்தரவு!

By

Published : Jan 21, 2021, 11:23 AM IST

பரக்ராம் திவாஸ் என்ற பெயரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. அவரின் புகழை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 2022ஆம் ஆண்டு வரை ஓராண்டு காலத்திற்கு கொண்டாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலான ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும், குறும்படம் திரையிடல், சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கருத்தரங்குகள் நடத்துதல் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் பங்கெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் ஒராண்டு கொண்டாட யூசிஜி உத்தரவு!

இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதுடன் இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்

ABOUT THE AUTHOR

...view details