தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டமளிப்பு விழா: அங்கி அணிய வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி! - நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்

தன்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு கூட அங்கி அணிந்தது இல்லை, இன்று அங்கி அணிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறினார்.

அங்கி அணிய வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி
அங்கி அணிய வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

By

Published : Jul 5, 2022, 3:40 PM IST

Updated : Jul 5, 2022, 5:44 PM IST

சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலை பிரிவில் 1613 மாணவர்களும், அறிவியல் பிரிவில் 1597 பேர் என மொத்தம் 3210 பேர் பட்டம் பெற்றனர். அவர்களில் கலை மற்றும் அறிவியல், M.Phil உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற 78 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பட்டங்களை வழங்கினார்.

அங்கி அணிய வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

இந்த பட்டமளிப்பு விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பட்டமளிப்பு விழாவிற்கான அங்கி அணிந்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துப் பேசும்போது, தன்னுடைய கல்வி காலத்தில் தான் பட்டம் பெற்றபோது கூட, அங்கி அணிந்து சென்று பட்டம் பெறவில்லை.

ஆனால் இன்று அங்கி அணிய வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் நன்றி. மாநில கல்லூரி மாணவர்கள் சிற்றுண்டி கட்டடம் சரியாக இல்லாமல் இருப்பதால் சரி செய்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். அதனை சரி செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலும், சட்டமன்ற உறுப்பினர் நிதியும் அளித்து சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு நிர்வாகிகளுக்கு அழைப்பு

Last Updated : Jul 5, 2022, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details